Friday, July 25, 2008

நுணலும் தன் வாயால் கெடும்

எட்டு கோடி மக்களின் முதல் அமைச்சராக இருக்கும் கலைஞர் மு. கருணாநிதி சினிமா, பாராட்டு விழா, கேசட் வெளியீடு, கதை வசனம், தொலைக்காட்சி நிர்வாகம் என எண்ணற்ற நிகழ்வுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மக்கள் நலனில் அக்கறை கட்டுவதில்லை என ஜெயா தொலைக்காட்சி தூற்றிக் கொண்டிருக்கிறது.

நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் தலை தூக்கிக் கொண்டிருந்தாலும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது தவறுவதில்லை. இதற்கிடையில் பெருமாள் படத்தின் விழாவுக்குச் சென்ற கருணாநிதி நமீதா கவர்ச்சியுடன் ஆடியதை கண்டு கழித்து விட்டு அக்காட்சிகளை கடவுள் பெருமாளுடன் தொடர்பு படுத்தி கோடானு கோடி மக்கள் நம்பும் விஷயத்தை கேவலப்படுத்துவது முதல்வர் பொறுப்பிற்கு அழகா எனத் தெரியவில்லை. அவ்வாறு தொடர்பு படுத்தி பேசுவது அந்த சூழ்நிலையில் அவசியமேயில்லை. ஆனாலும் பேசுகிறார்.

அத்தோடு மட்டும் விட்டாரா.....

இம்மாதிரியான கவர்ச்சிப் படங்கள் இளைஞர்களை ஈர்க்கும், இன்னும் இது மாதிரியான படங்கள் வர வேண்டும் என வாழ்த்துரை அளித்து வரவேற்பது எந்த விதத்தில் நியாயம் என்றே தெரியவில்லை.

சமயோகித பேச்சு, தமிழ் புலமை, நிர்வாகத் திறமை என எண்ணற்ற மக்களின் மனதில் இடம் பிடித்தவர் இவ்வகையான வக்கனைப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். பெரியார் ஒர் இயக்கத்தின் தலைவராய் இருந்து "கடவுளை மற, மனிதனை நினை" என தன் மனதில் தோன்றிய கருத்துகளையெல்லாம் கூறி மக்களின் அறியாமையை போக்க முயன்றார்.

ஆனால் முதல்வராக இருப்பவர் இவ்வாறு பேசுவது முறையா ? என எத்தனையோ மனங்களில் கேள்விக் கனைகள் ஆனால் பதில்கள் தான் இல்லை. நுணலும் தன் வாயால் கெடும் என்னும் பழமொழியை முதல்வர் அறிவார் என நான் நம்புகிறேன்.

Monday, July 21, 2008

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template